21 ஆண்டுகளுக்குப் பின்னர் கே.எஸ்.ரவிக்குமாரின் ரீ எண்ட்ரி... இதான் விஷயமா?

கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்களாகப் பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இந்தப் படம் மூலம் இயக்குனர்களாகிறார்கள். மலையாளத்தில் வெளியாகி விருதுகளைக் குவித்த அந்தப் படத்தில் கறாரான தந்தையாக சுராஜ் வெஞ்சிரமூடு நடித்திருந்த கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமாரே நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தையும் கே.எஸ்.ரவிக்குமாரே தயாரிக்கவும் செய்கிறார். `கூகுள் குட்டப்பன்’ என படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில், தர்ஷன் - லாஸ்லியா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார், `சபரியும் சரவணனும் என்னிடம் 10 ஆண்டுகளாக உதவி இயக்குனர்களாகப் பணியாற்றி வருபவர்கள். இந்தப் ரீமேக் ரைட்ஸை வாங்கிய பின்னர், படத்தில் நடிக்க வைக்கவே என்னை அணுகினார்கள். ஆனால், படத்துக்குத் தயாரிப்பாளர் கிடைக்காத நிலையில், நானே தயாரிக்கவும் முடிவு செய்துவிட்டேன். 21 ஆண்டுகளுக்குப் பின்னர் நான் தயாரிக்கும் படம் இது’’ என்றார்.