நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் கோடை விடுமுறைக்கு ரிலிஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. தற்போது பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்தது.
இப்படத்தின் போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் பீஸ்ட் பட முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என தகவல் வெளியாகிய நிலையில் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #BeastFistSingle என்ற hashtag-ஐ ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
ஏற்கனவே, ‘பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டநிலையில் தமிழ் புத்தாண்டு அன்று கேஜிஎப் 2’ மற்றும் ‘பீஸ்ட்’களமிறங்கி மோத போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், இரு தரப்பிடமும் ஏப்ரல் 14ம் தேதி வெளியிடு குறித்து படம் பேச்சு வார்த்தை போவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்குதுனு பொறுத்து இருந்து பார்க்கலாம்.
ஏற்கனவே ராஜமௌலியின் RRR, பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம் ஆகிய படங்களும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. அநேகமாக அந்த படங்களும் மார்ச், ஏப்ரல் என களம் காண முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதனால், பீஸ்ட் ஏப்ரல் 14இல் வெளியாகுமா அல்லது மே மாதம் வெளியாகுமா என பொறுத்திருந்து பார்க்கலாம். ஏனென்றால் பீஸ்ட் ஆரம்பிக்கும் போதே ஏப்ரல் ரிலீஸ் என்றுதான் ஆரம்பித்தது. ஆனால் RRR, KGF-2, ராதே ஷ்யாம் ஆகியவை ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளன. அதனால், பீஸ்ட் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா அல்லது மாற்றியமைக்கப்படுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…