Connect with us
kumarasambhavam

Cinema News

Kumaara Sambavam: தரமான டார்க் காமெடிக்கு ரெடியா இருங்க.. குமாரசம்பவம் முதல் விமர்சனம் இதோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் அதில் ஹீரோவாக நடித்த குமரன் தங்கபாண்டியன் வெள்ளி திரையில் முதன் முதலாக ஹீரோவாக களம் இறங்குகிறார். சீரியலில் மிகவும் அமைதியாக சீரியசான கேரக்டரில் நடித்த குமரன் வெள்ளித்திரையில் ஹீரோவாக நடிக்கும் தன்னுடைய முதல் படமான ”குமாரசம்பவம்” மூலம் காமெடிக்கு கலக்க வருகிறார்.

இந்த படத்தை பாலாஜி பேணுகோபால் இயக்கியிருக்கிறார். மேலும் இதில் பாயல் ராதாகிருஷ்ணன், ஜி.எம்.குமார், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அச்சு ராஜா மணி இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 12ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வந்தது. அதில் ஹீரோவாக நடித்திருக்கும் குமரன் கதைப்படி ஒரு படம் எடுக்க ஆசைப்படுகிறார். அதனால் அவர் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? இதில் படம் எடுத்தாரா இல்லையா? என்பதை காமெடி கலந்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

பத்திரிக்கை நண்பர்களுக்காக போடப்பட்ட சிறப்பு காட்சியில் இந்த படத்தைப் பற்றிய விமர்சனங்களை கொடுத்துள்ளனர் அதில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் வந்துள்ள சுத்தமான டார்க் காமெடி படம். முதல் பாதி விசாரணை காமெடியாக தொடங்கி இரண்டாம் பகுதி சிரிப்பை அடக்க முடியாமல் டார்க் காமெடியாக மாறுகிறது. லக்கி மேன் இயக்குனர் பாலாஜி வேணுகோபால் தனது நகைச்சுவை கதையை வலுவாக பிடித்துள்ளார்”.

“நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது குமாரசம்பவம். இந்நிலையில் இந்த படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. குமாரசம்பவம் சிறந்த நகைச்சுவை திரைப்படமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் பல காட்சிகளில் இரட்டை அர்த்த நகைச்சுவை இல்லை. ஒற்றை வரிகள் யாரையும் அவமானப்படுத்தப்படவில்லை. படம் முழுவதும் நகைச்சுவை உணர்வை வழங்குகிறது. லக்கி மேன் இயக்குனர் இந்த படத்தை எடுத்துள்ளார், அது எந்த அளவுக்கு பிடித்திருந்ததோ அதேபோல இந்த படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

”அறிமுக நடிகர் குமரன் போதுமான நடிப்பை வழங்கி உள்ளார். நகைச்சுவை அவருக்கு இயல்பாகவே வருகிறது. நடிகர் பாலா சிறப்பாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அற்புதமான இசையை கேட்டது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது சிறப்பான இசையமைத்த அச்சு ராஜா மணிக்கு பாராட்டுகள்”. என்று இந்த படத்தைப் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. இந்த வீக்என்டில் குடும்பத்துடன் சென்று காண சிறந்த நகைச்சுவை திரைப்படமாக குமாரசம்பவம் இருக்கும்.

author avatar
SATHISH G
சதீஷ் பி.இ. பட்டதாரியான இவர் 3 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 2 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top