×

பஞ்சாப் அணியில் கும்ப்ளே செய்யும் லாபி… கடுப்பான ரசிகர்கள்!

பஞ்சாப் அணியில் அதிகமாக கர்நாடகாவைச் சேர்ந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

 

பஞ்சாப் அணியில் அதிகமாக கர்நாடகாவைச் சேர்ந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

பஞ்சாப் அணிக்கு கடந்த 2 ஆண்டுகளாக தலைமை தாங்கி வருகிறார் கர்நாடக வீரரான கே எல் ராகுல். அந்த அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அனில் கும்ப்ளேவும் கர்நாடகாவைச் சேர்ந்தவர். இந்நிலையில் இவர்கள் இருவரும் அணியில் கர்நாடக வீரரான கருண் நாயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக பஞ்சாப் ரசிகர்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மோசமாக விளையாடும் கர்நாடக வீரர் கருண் நாயரை தொடர்ந்து அணியில் வைத்து பஞ்சாப் வீரரான மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு வழங்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இது பஞ்சாப் அணிக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News