தேவை முடிந்ததும் நன்றி மறந்த குஷ்பு? ராதா ரவி வருத்தம்

 
kushbhoo daughter wedding

 

 


தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா திருமணம் கோவாவில் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள் .

அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நடிகை குஷ்புவின் திருமணத்திற்கு நடிகர் ராதாரவி செல்லவில்லை. அவர்கள் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டதன் காரணமாக இவரது திருமணத்தில் நடிகர் ராதாரவி கலந்து கொள்ளவில்லை என செய்திகள் வெளிவந்தது.

இந்த நிலையில் அந்த செய்திகளுக்கு ராதாரவி வாய் திறந்து பதில் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது நடிகை குஷ்பு என்னை அவரது மகள் திருமணத்திற்கு அழைக்கவில்லை. அதனால் நான் போகவில்லை. திருமணத்தை கோவாவில் நடத்தினார்கள். அவர்கள் லெவல் இப்போது பெரிதாகி விட்டது போல அதனால்தான் என்னை கூப்பிடவில்லை.

kushbhoo daughter

சுந்தர் சி என்னை கூப்பிடுவார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவரும் கூப்பிடவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் சுந்தர் சி மதுரையில் போட்டியிடும் போது நான் தான் அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தேன். ஆனால், அவரும் என்னை கூப்பிடவில்லை. ஒருவேளை தேர்ந்தெடுத்து சிலரை மட்டும் கூப்பிட்டு இருக்கிறார்கள் போல. அழைத்திருந்தால் நிச்சயம் நான் அந்த திருமணத்தில் கலந்து கொண்டிருப்பேன்.

இப்போது நான் அவர்களுக்கு தேவையில்லாதவன் ஆகிவிட்டேன் என நினைக்கிறேன். அவர்கள் தேர்தலில் நின்ற போது நான் உதவினேன். அப்போது தேவை இருந்தது இப்போது தேவையில்லை போல. அதனால் என்னை உதறிவிட்டார்கள் என நடிகர் ராதாரவி இந்த விஷயத்தை கூலாக எதிர்கொண்டு இருக்கிறார்.

Tags

From Around the web