குடும்பத்தை கெடுத்த குஷ்பு…. கொலை செய்ய கூட தயங்காத ஜெயம் ரவி!
ஜெயம் ரவி வேதனை:
முன்னதாக நடிகர் ஜெயம் ரவியின் காதலி கெனிஷா ஜெயம் ரவியை விட்டு பிரிவதாக ஒரு நீண்ட வீடியோவில் தெரிவித்திருந்தார். நான் தான் குடும்பத்தை கலைத்து விட்டேன் என்று சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை எனக்கு மிக மோசமானதாக தெரிகிறது.
எப்போதும் வெறுப்பையே சுத்தி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே இந்த வாழ்க்கையில் இருந்து நான் வெளியேறுகிறேன். நான் நிம்மதியான வாழ்க்கையை தேடி செல்கிறேன். சென்னை விட்டு செல்கிறேன் என ஜெயம் ரவி உடன் ஆன வாழ்க்கை முறித்துக் கொண்டதை ஒரு வீடியோவின் மூலமாக தெரிவித்தார் .
சித்ரவதை:
அதை எடுத்து இன்று நடிகர் ஜெயம் ரவி பரபரப்பான பிரஸ்மீட் ஒன்றை கொடுத்திருக்கிறார். ஆம். இந்த பிரஸ் மீட்டில் கெனிஷா தன்னை விட்டு பிரிந்து விட்டார் என்றும் தன்னுடைய மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தார் மிகவும் மோசமாக என்னை சித்திரவதை செய்து வாழவே விடாமல் தினம் தினம் சாகடிக்கிறார்கள் என ஜெயம் ரவி மனம் உடைந்து கத்தி கதறி அழுது இருக்கும் இந்த வீடியோ ஒட்டுமொத்த கோலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
குஷ்பு தான் காரணம்:
மேலும் இது ஒட்டுமொத்தத்திற்கும் காரணம் என் மனைவிக்கு சப்போர்ட் செய்பவர்கள் அந்த மூன்று எழுத்து நடிகை… இட்லி நடிகை என மறைமுகமாக நடிகை குஷ்புவை தாக்கி பேசியிருக்கிறார். மேலும் இது குறித்து நான் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
அவர் மீதும் வழக்கு இருக்கிறது. நான் அவர்களை நான் சட்டரீதியாக பார்த்துக் கொள்வேன் என்றும் நடிகர் ஜெயம் ரவி எச்சரித்திருக்கிறார். முன்னதாக ஆர்த்தியின் அனைத்து விஷேஷங்களிலும் சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்களிலும் நடிகை குஷ்பூ மற்றும் குஷ்புவின் மகள்கள் என குடும்பத்துடன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
