ஹீரோயினாகப்போறாங்கன்னு சொன்னாங்க!.. அதற்குள் திருமணமா?.. குஷ்பு மகளின் திடீர் முடிவு!..
தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர தம்பதிகளான குஷ்பு மற்றும் சுந்தர்.சி ஆகியோரின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் திருமண ஏற்பாடுகள் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், குடும்பத்தினர் நேரில் சென்று நரேந்தர மோடியை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.
1990-களில் திரைப்படப் பணிகளின் போது இயக்குநர் சுந்தர் சியுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு திரையுலகின் முக்கிய தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர்.
குஷ்பு – சுந்தர் சி தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அவந்திகா மற்றும் இளைய மகள் அனந்திதா. அவந்திகாவை நடிகையாக அறிமுகபடுத்த இருந்த நிலையில் தற்போது அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது மகள் தற்போது சில படங்களில் தயாரிப்பளராக பணியாற்றி வருகிறார்.
200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள குஷ்பு, பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகள், தொகுப்பாளர் பணிகள் மற்றும் அரசியல் துறைகளில் கவனம் செலுத்தினார். பல்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றிய அவர் தற்போது தேசிய அரசியலிலும் அறியப்பட்ட முகமாக உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் குஷ்பு, சுந்தர் சி., அவர்களது மகள் அவந்திகா மற்றும் அவரது வருங்கால கணவர் ஷ்ரவன் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதமருக்கு திருமண அழைப்பிதழை வழங்கிய அவர்கள், அவரது வாழ்த்துகளையும் ஆசியையும் பெற்றனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்நிலையில், மகள் அவந்திகாவின் திருமண செய்தி குஷ்பு குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திருமண தேதி மற்றும் விழா தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர். திரையுலகம், அரசியல் மற்றும் தொழில்துறை பிரபலங்கள் பலரும் இந்த திருமண விழாவில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
