இது என் குடும்பம்!.. மீண்டும் ரவி மோகனை சீண்டிய குஷ்பு!.. என்ன ஆகப்போகுதோ தெரியலயே!..
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து பிரச்சனை தொடர்பான சர்ச்சையாகும். சமூக வலைதளங்களில் இவர்களை பற்றிய பல்வேறு தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் மீண்டும் இந்த விவகாரத்தை பேசுபொருளாக மாற்றியுள்ளது.
சமீபத்தில், ரவி மோகனுடன் நெருக்கமாக தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்ட கெனிஷா தற்போது அவரிடமிருந்து விலகியுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் ரவி மோகன், “எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன்” மேலும், தனது வாழ்க்கை பாதிக்கப்பட்டதற்கு “அந்த மூன்று எழுத்து இட்லி நடிகை தான் காரணம்” என மறைமுகமாக குறிப்பிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இந்த கருத்து நடிகை மற்றும் அரசியல்வாதியான குஷ்புவை குறிப்பிட்டே கூறப்பட்டதாக பலரும் யூகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்த்தி ரவி மற்றும் அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து “My Family” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் ஆர்த்தி ரவி, அவரது குழந்தைகள் மற்றும் நெருங்கிய குடும்பத்தினர் இடம்பெற்றிருந்தனர். இந்த பதிவு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
குஷ்புவின் இந்த பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, குடும்ப பிரச்சனை தொடர்பான சர்ச்சைகள் பேசப்பட்டு வரும் நேரத்தில், ஆர்த்தி ரவிக்கு ஆதரவாக குஷ்பு நின்றுள்ளாரா என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ரவி மோகன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து புலம்பும் போது மூன்றெழுத்து இட்லி நடிகை தான் தனது குடும்ப வாழ்க்கை கெட்டுப்போக காரணம் என்றும் அவர் யார் பஞ்சாயத்து பண்ணுவதற்கு என நடிகை குஷ்புவை மறைமுகமாக சாடி பேசியிருந்த நிலையில், குஷ்பு தற்போது தனது குடும்பம் என ஆர்த்தி ரவி மற்றும் அவரது மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
