×

26 ஆண்டுகளுக்கு பிறகு விமானத்தில் இணைந்த ஒரு கூட்டு பறவைகள்!... அடடா என்ன ஒரு coincident

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மீனா மற்றும் குஷ்பு இருவரும் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படத்தை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தர்பார் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த.
 

தல அஜித்தின் மாஸான இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இருவரும் இணையும் முதல் படம் அண்ணாத்த. ஆதலால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடிக்கின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ஹைதராபாத்தில் நடக்கும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் அங்கு சென்றார். நயன் தாராவும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது மீனா மற்றும் குஷ்பு இருவரும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள இன்று சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். அப்போது இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்தப் புகைப்படத்தை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, விமான நிலையத்தில் நான் யாரை சந்தித்தேன் என்று பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டாமை படத்தில் மீனா மற்றும் குஷ்பு இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீனா மற்றும் குஷ்பு இருவரும் இணைந்துள்ளனர். ஆனால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மற்றும் குஷ்பு ஆகியோர் இணைந்து அண்ணாத்த படத்தில் நடிக்கின்றனர். இதற்கு முன்னதாக, மன்னன் மற்றும் அண்ணாமலை ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News