×

என்னை மிகவும் ஏமாற்றிவிட்டார்... பிரபல நடிகரால் வருத்தத்தில் குஷ்பு!

அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து குஷ்பூ பல விசயங்கள் குறித்து பேசினார். ரஜினியின் அரசியலில் வருகை ஆர்வத்துடன் எதிர்பார்த்தவர்களில் அவரும் ஒருவர்.

 

ரஜினியின் அரசியல் வருகை குறித்து அவர் அன்புள்ள ரஜினி சார், ஒரு வழியாக நீங்கள் அரசியலில் இறங்குகிறீர்கள் என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் முழு முயற்சியை இதில் காட்டுவீர்கள் என்று எனக்கு உறுதியாகத் தெரியும் என வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஜினி உடல் நிலை காரணத்தால் கட்சி தொடங்கவில்லை. அரசியலுக்கு வரமுடியவில்லை. என்னை மன்னியுங்கள் என கூறியுள்ளார். இதனால் பலரும் தங்களது கருத்தை தெரிவிக்கும் வேளையில் குஷ்பூ டிவிட்டரில் அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது. 

ஆனால் உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் உடல்நலத்திற்கு முன்பு வேறு ஏதுவும் பெரிதல்ல என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுடைய நலம்விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். நீங்கள் எனக்கு விலைமதிப்பற்ற, மிக முக்கியமான ஒருவர். நன்றாக மகிழ்ச்சியாக இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News