×

கோர விபத்தில் சிக்கிய குஷ்பு... தற்போது எப்படி உள்ளார் நடிகை

குஷ்பு கார் விபத்து என்ற செய்தி வெளியாகி, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தற்போது கார் விபத்து தொடர்பாக குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

பாஜக சார்பில் தமிழகம் முழுக்க வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தாலும், தடையை மீறி நடத்தப்பட்டு வருகிறது. 

அவ்வாறு நடைபெறும்போது, காவல்துறையினர் பாஜக தலைவர்களைக் கைது செய்து வருகிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக, சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு காரில் பயணித்தார்.

அப்போது மேல்மருவத்தூர் அருகே அவருடைய கார் விபத்தில் சிக்கியது."மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன். கடலூர் வேல் யாத்திரைக்கான பயணம் தொடர்கிறது. காவல்துறையினர் விசாரிக்கின்றனர். முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார்.

என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்.


 


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News