×

ஈவு இரக்கமே இல்லாம சாவடிச்சுடீங்களே- நடிகை குஷ்பு வருத்தம்!

கேரளாவில் காட்டு     யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதனைப் பார்த்த சிலர் அண்ணாசிப் பழம் ஒன்றை அந்த யானைக்கு கொடுத்துள்ளனர். அந்த அண்ணாசிப் பழத்தை யானைக் கடிக்கையில் அதில் வைக்கப்பட்டு இருந்த வெடி ஒன்று வெடித்துள்ளது. இதனால் யானையின் நாக்கு மற்றும் வாய் கடுமையாக காயமடைந்துள்ளது.

 

இதையடுத்து அந்த ஊரில் இருக்கும் வீட்டையோ மனிதர்களையோ தாக்காமல் வலியுடனேயே அந்த கிராமத்தைச் சுற்றி வந்த யானை பின்னர் வெள்ளியாற்றில் இறங்கி நின்றபடியே மே 27 ஆம் தேதி இறந்துள்ளது. இதையடுத்து கும்கி யானைகளின் உதவியோடு  அந்த யானையை மீட்டெடுத்து பரிசோதித்து பார்க்கையில் அதன் வயிற்றில் ஒரு சிசு இருந்தது தெரிந்துள்ளது.அந்த யானையின் மரணம் பற்றி வனத்துறை அதிகாரி சமூகவலைதளத்தில் பகிர, ஈவு இரக்கமே இல்லாமல் வெடிக்குண்டு வைத்து கொன்றவனை கண்டித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்போது நடிகை குஷ்பு, பிரபல யூடியூப் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், " பேசுறதுக்கே ரொம்ப கஷ்டமா இருக்குது ... பசியில் இருக்கும் ஒரு புள்ளத்தாச்சி யானைக்கு வெடுக்குண்டு வைத்து பழத்தை கொடுத்துவிட்டு சாதிச்சுட்டீங்களா..? மனுஷங்களா நீங்களா? எப்படி இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டு தூக்கம் வருது உங்களுக்கெல்லாம். மனிதர்களின் 6-வது அறிவை இப்படி கீழ்த்தரமான விஷயங்களுக்கு பயன்டுத்துகிறீர்களே... கேவலம் ... ரொம்ப கேவலம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News