குஷ்பு வெளியிடும் லெனின் பாண்டியன் ஸ்பெஷல் தகவல்
முன்றாம்பிறை, இதயம் ஆனஸ்ட்ராஜ் படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் லெனின் பாண்டியன். அறிமுக இயக்குநர் டிடி பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கங்கை அமரன் கதையின் நாயகனாக நடிக்கிறார். கங்கை அமரன் நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. இதற்கு முன்பு தனது படங்களில் சிறு சிறு காட்சிகளில் மட்டுமே தலைகாட்டிவந்தார்.
சமீபத்தில் இப்படம் குறித்த ஒரு நிமிட வீடியோ நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படம் குறித்த சிறப்பு தகவல் நாளை வெளியாகிறது. நடிகை குஷ்பு இதனை நாளை அறிவிக்கிறார் என அப்படக்குழு தெரிவித்துள்ளது.
