சுந்தர்.சி விலகியதை நான்தான் கமல் சாருக்கே சொன்னேன் - குஷ்பு
கமல்ஹாசன் நடிப்பில் ரஜினி நடித்து வரும் படம் தர்மன். அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பல்ர் நடித்து வருகின்றனர். முன்னதாக இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. அது குறித்து அதிகாரபூர்வமாக வீடியோவாகவே வெளியிட்டனர் ராஜ் கமல் நிறுவனத்தினர். ஆனால் என்ன காரணத்தினாலோ சுந்தர்.சி அதிலிருந்து விலகினார். அதன்பின்னர்டே அஸ்வத் இப்படத்திற்குள் வந்தார். சுந்தர். சி விலகிய காரணம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை.
இந்த நிலையில் சுந்தர்.சி மனைவியும் நடிகையுமன குஷ்பு சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் நெறியாளர் ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது குறித்து கேட்டார். அதற்கு பதிலளித்த குஷ்பு, ஏதோ ஒரு காரணத்திற்காக சுந்தர். சி தலைவர் 173 படத்திலிருந்து விலகினார். ஒரு இயக்குனருக்கு எந்த படத்தை இயக்குவது எந்த படத்தை இயக்க வேண்டாம் என்று முடிவு செய்யும் உரிமை உண்டு. சுந்தர்.சி இந்த படத்தை இயக்க போவதில்லை என்ற முடிவை கமல்சருக்கு நான்தான் தொலைபேசி மூலம் தெரிவித்தேன் என்றார்.
