×

இளமை இதோ இதோ.. செம போட்டோ போட்ட குஷ்பு

தற்போது நடிகர் விஜய்சேதுபதியுடன் “லாபம்” திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 
 
Khus

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்து அரசியலுக்கு வந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்.

காங்கிரஸ் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். இது குஷ்புவின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Khus

நடிகை குஷ்பு 90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் .ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார் என அப்போதைய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார்.

சினிமாவை தொடர்ந்து சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் குஷ்பு பணியாற்றியுள்ளார்.தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ்  vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார். இந்நிலையில் நடிகை குஷ்பு  தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Khus

அதில் கருப்பு நிற ஜம் சூட் உடை அணிந்துள்ளார்.இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த குஷ்பு, நீங்கள் கடினமாக உழைத்தால், சிறப்பான பலன் கிடைக்கும் என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை த்ரிஷா ‘ i love the sequence ' என்று கமெண்ட் செய்துள்ளார்.மேலும் குஷ்புவின் இந்த லுக்கை பார்த்த ரசிகர்கள் பலரும் வியந்து போயுள்ளனர்.Khus

From around the web

Trending Videos

Tamilnadu News