×

அடி குடுக்குற கைப்புள்ளைக்கே இந்த நிலைமைனா... மத்தவங்க எப்படியோ

என் ட்விட்டர் கணக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது.

 
40417611-5244-4828-82f5-faf102e31909

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கில் பிரையன் என்கிற பெயர் இருக்கிறது.

குஷ்பு போட்ட ட்வீட்டுகள் எதுவும் இல்லை. இந்நிலையில் இது குறித்து குஷ்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குஷ்பு கூறியிருப்பதாவது,

என் ட்விட்டர் கணக்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இது குறித்து ட்விட்டர் நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறோம். கடந்த மூன்று நாட்களில் அந்த கணக்கில் இருந்து ஏதாவது ட்வீட் வந்திருந்தால் அது நான் செய்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

குஷ்பு அளித்த விளக்கத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, சினிமா பிரபலம், அதுவும் மத்தியில் ஆளும் கட்சியில் இருக்கும் குஷ்புவின் ட்விட்டர் கணக்கையே உடனே மீட்க முடியவில்லை என்றால் சாதாரண ஆட்களின் நிலைமை பற்றி சொல்லவா வேண்டும். ட்விட்டரில் குஷ்புவை ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம்.

அந்த பிரையன் யாராக இருக்கும், ஏன் குஷ்புவை குறி வைத்திருக்கிறார் என்று தெரியவில்லையே என தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News