
latest news
கொரில்லா க்ரைம் த்ரில்லர்!…வெளியானது ’குற்றம் புதிது’ டிரைலர்
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் தான் ”குற்றம் புதிது”. இதன் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். சேஷ்விதா கனிமொழி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார், மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் டிரைலர் பார்க்கும்போது இது கிரைம் திரில்லர் ஜானர் போல் தெரிகிறது. உணவு டெலிவரி வேலை செய்யும் ஒரு இளைஞனாக கதாநாயகன் நடித்துள்ளார். அப்படி உணவு டெலிவரி செய்ய செல்லும் பொழுது திடீரென்று அடிபட்டு ஒரு வினோத பாதிப்புக்கு உள்ளாகிறார். அதனால் அவர் கொரிலா போல பாதிப்புக்கு உள்ளாகிறார். அவர் மீது கொலை பழி விழுகிறது. இந்த கொலையை செய்தது யார் ? கதாநாயகனின் வினோத பாதிப்புக்கு என்ன காரணம் ? என பல்வேறு திருப்பங்களுடன் இந்த டிரைலர் இருக்கிறது.
இந்த படத்தை பற்றி இயக்குனர் ஆம்ஸ்ட்ராங் கூறுகையில்,” முதல் படத்திலேயே ஹீரோ தருண் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். அதுவும் கொரில்லாவாக அவர் கைகளையும் கால்களையும் ஊன்றி ஊன்றி நடக்கும் காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு வலிகளை தாங்கி நடித்திருக்கிறார். குற்றம் புதிது படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. இது மாறுபட்ட படமாக இருக்கும், அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறியுள்ளார்.
கிரைம் திரில்லர் ஜானரில் அதிரடியாக உருவாகியிருந்த திரைப்படம் கற்பனைக்கு அப்பாற்பட்டும் அதே சமயத்தில் எதார்த்தமான பானையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.