×

குட்டி ஜானுவுக்கு பாராட்டுத் தெரிவித்த குட்டி ராம் – இணையத்தில் நெகிழ்ச்சி !

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள கவுரி கிஷானுக்கு ஆதித்யா பாஸ்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

 

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ள கவுரி கிஷானுக்கு ஆதித்யா பாஸ்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழில் மெஹா ஹிட்டான 96 படம் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த வாரம் வெளியானது. வசூல் நிலவரம் மோசமாக இருந்தாலும் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜானு படத்திலும் சிறு வயது ஜானுவாக தமிழில் நடித்த கௌரி கிஷானே நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த 96 படத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கர் படத்தையும் கவுரியையும் பாராட்டி எழுதி இருந்தார். இதற்குப் பதிலளித்த கவுரி ‘ஆதி, படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் உன்னை நினைக்காமல் இருக்க மாட்டேன்.’ எனத் தெரிவித்து தனது அன்பைப் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News