Jananayagan: ஜனநாயகன் 4 கோடி கொடுத்து வாங்கின கதை!.. இது தெரியாம போச்சே!..

 
Jananayagan: ஜனநாயகன் 4 கோடி கொடுத்து வாங்கின கதை!.. இது தெரியாம போச்சே!..

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இது விஜயின் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. ஜனநாயகன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை காண விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இந்த படம் உருவானபோது இது தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என செய்திகள் வெளியானது. ஆனால் படக்குழு எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தது. அதேநேரம் சில நாட்களுக்கு முன்பு ஒரு வார இதழ் ஒன்றுக்கு ஹெச்.வினோத் பேட்டி கொடுத்தபோது இதுபற்றி கேள்வி கேட்டபோது ‘இந்த கேள்விக்கு ஆமாம் எனவும் சொல்ல மாட்டேன்.. இல்லை எனவும் சொல்ல மாட்டேன்’ என பதில் சொல்லியிருந்தார்.

Jananayagan: ஜனநாயகன் 4 கோடி கொடுத்து வாங்கின கதை!.. இது தெரியாம போச்சே!..

நேற்று வெளியான ஜனநாயகன் டிரெய்லர் வீடியோவை பார்த்தபோது பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்றிருந்த பல காட்சிகள் ஜனநாயகனிலும் இடம் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட அந்த படத்தின் கதையைதான் அப்படியே எடுத்திருக்கிறார்கள். அதேநேரம் விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால் அரசியல் தொடர்பான சில காட்சிகளை இந்த படத்தில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நான்கு கோடி ரூபாய் கொடுத்து ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கேவிஎன் புரடெக்‌ஷன் வாங்கியிருக்கிறது என செய்திகள் வெளியாகியிருக்கிறது. ஹாலிவுட்டில் வெளியான பிரேக் டவுன் என்கிற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பணம் கொடுத்து வாங்கி மகிழ்திருமேனி இயக்க விடாமுயற்சி என்கிற தலைப்பில் அஜித் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

From Around the web