ஜனநாயகன் ரிலீஸ்!. காசு பாக்க முடியாது!.. புலம்பும் தியேட்டர் ஓனர்ஸ்!..
விஜய் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். ஏனெனில் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் கடைசியாக நடித்த திரைப்படம் இது. இனிமேல் விஜயை நடிகராக பார்க்க முடியாது.. தியேட்டரில் ஸ்கிரீனில் அவரை பார்த்து விசில் அடிக்க முடியாது.
ஆனால் கடந்த ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய ஜனநாயகன் திரைப்படம் தற்போது வரை வெளியாகவில்லை. அதற்கு காரணம் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு தணிக்கை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்து தணிக்கை சான்றிதழை கொடுக்கவில்லை. எனவே, தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு படத்தை மறு தணிக்கைக்கு விண்ணப்பித்தார். ஆனால் அதன்பின் நான்கு மாதங்கள் ஆகியும் படத்திற்கு சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.
தற்போது ஒரு வழியாக ஜனநாயகனுக்கு விடிவுகாலம் பிறந்து விட்டது. விரைவில் இந்த படத்திற்கு தடைக்கு சான்றிதழ் கிடைக்கவிருக்கிறது. எனவே வருகிற 23 அல்லது 31ம் தேதி ஜனநாயகன் உலகமெல்லாம் வெளியாகவிருக்கிறது. அதேநேரம் இந்த படத்தை தியேட்டரில் வெளியிடும் போது ரசிகர்களுக்கு என்று தனி சிறப்பு காட்சி திரையிடக்கூடாது, அதேபோல் பிளாக்கில் டிக்கெட் விற்கக் கூடாது, மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே டிக்கெட் கவுண்ட்டரில் வசூலிக்க வேண்டும்.. ஒரு ரூபாய் கூட சேர்த்து வாங்க கூடாது என வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர் அதிபர்களிடமும் தயாரிப்பு நிறுவனம் கறாராக சொல்லிவிட்டதாம்.
ஏனெனில் விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகிவிட்ட நிலையில் இதையே தடுக்க முடியாதவர் எப்படி ஊழலை தடுப்பார் என எதிர்க்கட்சிகள் பேசுவார்கள். எனவே அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என தயாரிப்பாளர் சொல்லிவிட்டாராம். இதனால், தியேட்டர் அதிபர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பெரிய லாபம் வராது என்கிறார்கள்.
அதை ஈடு கட்டுவதற்காக கே.வி.என். நிறுவனம் தயாரிப்பில் கே.ஜி.எப் பட நடிகர் யாஷ் நடித்துள்ள டாக்சிக் திரைப்படத்தை உங்களுக்கே கொடுக்கிறோம் என ஜனநாயகனை ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தர்களிடம் தயாரிப்பு நிறுவனம் சொல்லியிருக்கிறதாம். எனவே வேறு வழியில்லாமல் இதற்கு அவர்கள் ஒத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது..
