ஜூலை 23-ஆம் தேதியே விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தை KVN நிறுவனம் ரிலீஸ் பண்ண இதுதான் காரணமா?
ஒரு உச்ச நட்சத்திரத்தின் படம் 6 மாதங்கள் தாமதமாகி ரிலீஸ் ஆவது இதுவரை நடந்ததில்லை. ஆனால், நடிகரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய்யின் 'ஜன நாயகன்' படத்துக்கு அதுதான் நடந்திருக்கிறது.
இந்த ஆண்டு (2026) ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு, பின் சென்சார் பிரச்சனையால் தள்ளிப்போன படம் வருகிற ஜூலை 23-ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகப்போகிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது.
Tested by fire.
— KVN Productions (@KvnProductions) July 15, 2026
Forged by time.
Built for history.
The tougher the battle,
The louder the victory.#JanaNayaganFromJuly23#JanaNayakuduFromJuly23#JanNetaFromJuly23
The Hon'ble Chief Minister @actorvijay @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol… pic.twitter.com/21xjixgUBM
சமீபத்தில், சென்சார் பிரச்சனை முடிவுக்கு வந்ததும் இப்படத்தை தயாரித்த 'KVN புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் முதலில் படத்தை ஆகஸ்ட் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யலாம் என்றும், படத்துக்கு பெரிய லெவலில் புரொமோஷன் செய்யலாம் என்றும் திட்டம் போட்டிருந்தனர்.

ஆனால், இந்த படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தான், சென்சார் சான்றிதழும் வந்துவிட்டது, இதற்கு மேலும் தாமதம் செய்ய வேண்டாம், வேறு ஏதாவது பிரச்சனை வருவதற்குள் படத்தை ரிலீஸ் வேண்டும் என்று கூறி விட்டாராம். இதனால் தான் உடனே படத்தை ரிலீஸ் செய்கிறதாம் 'KVN' நிறுவனம்.
