Connect with us

Cinema News

அஜித் இன்னும் அத மாத்திக்கவே இல்ல.! அந்த நடிகை கூறிய ரகசிய தகவல்.!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் அஜித்குமார். இவர் நடிப்பில் திரைப்படங்கள் வருகிறது என்றால் அது திரையரங்கு  உரிமையாளர்களுக்கு கொண்டாட்டம் தான். ரசிகர்கள் எப்படியும் அப்படத்தை திருவிழாவாக மாற்றிவிடுவர்.

அவர் தற்போது தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து, காதல் மன்னன் எனும் முகத்தை மாற்றி, ஆக்சன் பக்கம் மட்டுமே தனது கவனத்தை திசை திருப்பி பணியாற்றி வருகிறார். இவருடன் பணியாற்றிய பலர் மீண்டும் அந்த பழைய அஜித்தை பார்க்க முடியவில்லை என வருந்தி வருகின்றனர்.

இதில், அஜித்துடன் தீனா படத்தில் ஜோடியாக நடித்து பலரது மனதை கவர்ந்த நடிகை லைலா அண்மையில் அளித்த பேட்டியில் நடிகர் அஜித் பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் கூறுகையில், அவருடன் தீனா படத்தில் நடித்தது வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.

இதையும் படியுங்களேன் – மீண்டும் காதல் மன்னனாக அஜித்.! அந்த ஹீரோயின் ஒரு மாதிரி ஆச்சே.!

அவர் தீனா படத்தில் நடிக்கும் போது அவ்வளவு அழகாக இருப்பார் அதே போல தான் தற்போதும் அவ்வளவு அழகாக இருக்கிறார். இன்னும் அந்த அழகு அவருக்கு மாறவே இல்லை என அஜித் பற்றி  மிகவும் நல்ல விதமாக கூறியிருந்தார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top