×

பாலிவுட் ரசிகர்களை மிரட்டும் "லட்சுமி பாம்" ட்ரைலர்!

அக்ஷய் குமாரின் மிரட்டலான நடிப்பில்  "லட்சுமி பாம்" ட்ரைலர்

 

தமிழில் சூப்பர் ஹிட்டாகிய 'காஞ்சனா' திரைப்படத்தின் இந்தி ரீமேக் 'லட்சுமி பாம்' என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள இப்படத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் அக்‌ஷய் குமார் ஹீரோவாக நடிக்கிறார்.

திருநங்கையாக அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  படப்பிடிப்புகள் முடிந்து வருகிற மே 22 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கினாள் வெளியீட்டு தேதி தள்ளி சென்றது.

இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அக்ஷய் குமாரின் திரைப்பயணத்தில் இந்த படம் மிகப்பெரும் சவாலான கதாபாத்திரமாக அமையும் என இப்போதே விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். வரும் தீபாவளி தினத்தில் ஹாட்ஸ்டார் தளத்தின் வழியாக மிரட்ட வரும் இப்படத்தின் ட்ரைலர் இதோ..


From around the web

Trending Videos

Tamilnadu News