×

தன்னுடைய காதலன் குறித்து தடாலடியாக கூறிய லட்சுமி மேனன்!

காதல் குறித்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த லட்சுமி மேனன்

 

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. இந்நிலையில் சமீப நாட்களாக வித விதமான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்ததால் பிக்பாஸில் பங்கேற்க போகிறார் என வதந்திகள் எழுந்தது.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ரசிகர் ஒருவர் நடிகை லட்சுமி மேனனிடம், நீங்கள் சிங்கிளா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், " இல்லை " என கூறி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து யார் அந்த நபர்...? லட்சுமி மேனனை காதலிப்பது ஒரு நடிகரா இருப்பாரோ? என்றெல்லாம் பல கோணத்தில் ஆராய்ந்து வருகின்றனர். சீக்கிரம் நீங்களே சொல்லிடுங்க தாயே... இல்லனா யார் யாரெல்லாமோ உங்க கணவராகிடுவாங்க...

From around the web

Trending Videos

Tamilnadu News