×

ப்பாஹ்  செம... பரதநாட்டியத்தில் பட்டைய கிளப்பும் லட்சுமி மேனன்!

லட்சுமி மேனனின் பரதநாட்டிய புகைப்படம் இணையத்தில் வைரல்

 

தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலமாக அறிமுகமான லட்சுமி மேனன், வரிசையாக பல ஹிட் படங்களில் நடித்தார். அஜித்துடன் அவர் நடித்த வேதாளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு லட்சுமி மேனனுக்கு எந்த படமும் தமிழில் பெரிதாக வரவில்லை. இதையடுத்து கடந்த ஒரு வருடமாகவே அவர் தமிழ் சினிமாவில் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் லட்சுமி மேனன் உடல் எடையை குறைத்து ஒல்லியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் பார்வையை திசை திரும்பியுள்ளார். தற்போது பரத நாட்டியத்தில் கவனத்தை செலுத்தி வரும் லட்சுமி மேனன் நாட்டியம் ஆடிய புகைப்படம் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், உங்களுக்குள் இவ்வளவு திறமை ஒளிஞ்சுட்டு இருக்கா.. என வாய்ப்பிளந்துவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News