×

அதை பண்ணேன் உடல் குறைஞ்சுடுச்சு - சாப்பிடுறதுல எந்த குறையும் வைக்கல - லட்சுமி மேனன் பளீச்!

உடல் எடை குறைத்தது குறித்து நடிகை லட்சுமி மேனன் பேட்டி

 

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. தற்ப்போது மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என எண்ணி ஸ்டைலிஷ் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீப நாட்களாக உடல் எடையை பாதியாக குறைத்து படு ஸ்லிம் ஆகிவிட்டார். தினம் தினம் சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட் இயக்குனர்களின்  கவனத்தை ஈர்த்து வருகிறார். இது குறித்து பேட்டி ஒன்றில், நான் சாப்பிடுவதில் எந்த குறையும் வைக்க மாட்டேன். உடல் எடை நிறைய டான்ஸ் ஆடினதால் அதுவாகவே குறைஞ்சுடுச்சு... வெயிட் லாஸ் பண்ணனும்னு நினைத்து டான்ஸ் ஆடல என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News