×

ஒரு ஆம்பளைய கேள்வி கேட்க உனக்கென்ன தருதி இருக்கு வனிதா!... கொந்தளிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்.... அட மறுபடியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்து விமர்சனம் செய்து வரும் வனிதாவை பார்த்தால் சிரிப்பாகவும் கோபமாகவும் இருக்கிறது என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

பன்னிரெண்டு வருட வேட்கை, கடின உழைப்பு, என் கணவரின் நிபந்தனையற்ற ஆதரவு அவற்றின் பயனாக இன்று மதிப்பிற்குரிய மத்திய அரசின் விருது கிடைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றேன். இந்த நிலையில் நான் துரதிர்ஷ்டவசமாக இந்த பெண்ணின் வாயில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பை நானே உருவாக்கிக் கொண்டேன்.

என்னை மிகவும் கொடூரமான, கேவலமான பெயர்கள் கொண்டு அழைத்ததோடு மட்டும் அல்லாமல், உயிரையே விட்டாலும் மானத்தை விட்டுக் கொடுக்காத என்னைப் போன்றோர் சுயமரியாதையை சீண்டும் வகையில், கற்பனையில் கூட எண்ண முடியாத அளவிற்கு மோசமாக பேசினார். அது என் தாய்மாமா சொன்னதைத் தான் நினைவூட்டியது. 

அப்படிப்பட்ட இந்த பெண்ணுக்கு இன்று இந்த ஆணை கண்டிக்க என்ன தகுதி இருக்க முடியும்? இந்நிலை மாற வேண்டுமென்றால் இந்த பெண்ணை போல பேசுபவர்கள் தான் முதலில் மாற வேண்டும் என்றார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News