×

ஜெயஸ்ரீ விவகாரத்தில் கொதித்தெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன்!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகி மபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, மாணவி ஜெயஸ்ரீ வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் வீடியோ மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ''நேற்று தான் எனக்கு சிறுமி ஜெயஸ்ரீ பற்றிய விஷயங்கள் தெரிய வந்தது. அந்த குழந்தையோட வீடியோவில் அப்பா எங்கனு கேட்கும். அதுக்கு பிறகு என்னால அந்த வீடியோவை பார்க்க முடியவில்லை. முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கார். அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். உடனடியாக அவங்களுக்கு தண்டனை கொடுக்கணும்.

ஒவ்வொரு ஆணும் பெண் அனுபவிக்கிற பிரசவ வேதனையை பார்க்கணும். அப்போ உங்களுக்கு புரியும். அப்போதா பெண்களை கொடுமைப்படுத்துறதும் பெண் குழந்தைகளை abuse பண்றதும் நிக்கும். தண்டனைகள் மட்டும் பத்தாது'' என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News