×

நான் பிக்பாஸ்க்கு வரவில்லை... என் பெயரை நீக்குங்கள். பிரபல தமிழ் நடிகை!

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 தற்போதுதான் களைகட்ட தொடங்கியுள்ளது. முதல் நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5இன் புதிய ப்ரமோ வீடியோ வெளியானது.

 
Bigg_Boss_Tamil_Season_4_Poster

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 தற்போதுதான் களைகட்ட தொடங்கியுள்ளது. முதல் நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமலஹாசன் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். கடந்த வாரம் பிக்பாஸ் சீசன் 5இன் புதிய ப்ரமோ வீடியோ வெளியானது.

இந்த வீடியோவில் இந்த சீசனுக்கான புதிய லோகோவும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. சில தினங்களுக்குமுன் கல்யாணவீட்டில் கலாட்டா நடப்புது போன்ற ஒரு ப்ரமோ வீடியோவை வெளியிட்டிருந்தது பிக்பாஸ் குழு. இவ்வாறாக சமீபகாலமாக பிக்பாஸ் சீசன் 5 பற்றிய ஏதாவது ஒரு அறிவிப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது.

lakshmi ramakrishnan
lakshmi ramakrishnan

ஒவ்வொரு நாளும் இதில் கலந்துகொள்ளவிருக்கும் பிரபலங்களைப்பற்றிய ஏதாவது ஒரு செய்தியும் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தவொரு பெயர் பட்டியலும் பிக்பாஸ் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

இந்நிலையில் நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனின் பெயரும் பிக்பாஸில் கலந்துகொள்பவர்கள் லிஸ்டில் அடிபட்டது. இதுகுறித்து டுவீட் செய்த அவர், 'நான் பிக்பாஸில் கலந்துகொள்ளவில்லை, கலந்துகொள்வதாக சொல்லவும் இல்லை'. 

பின் ஏன் என்னுடைய பெயரை பிக்பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியலில் இணைத்துள்ளீர்கள். தயவுசெய்து எனது பெயரை அந்தப் பட்டியலிலிருந்து நீக்குங்கள் என பிக்பாஸ் குழுவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

lakshmi ramakrishnan
lakshmi ramakrishnan

இவரது டுவீட்டிற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் சிலர், பிக்பாஸிற்கு செல்லவேண்டாம் மேடம் என இவரை கேட்டுக்கொண்டுள்ளனர். வெகு சிலரோ, பிக்பாஸ் மூலம்தான் நீங்கள் சம்பாரிக்க வேண்டும் என்றில்லை, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' என்ற நிகழ்ச்சியே போதுமானது என கலாய்த்துள்ளனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News