×

ரூ.1.25 கோடி கேட்டு வனிதாவை மிரட்டும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் - ஆதாரம் இதோ!

நடிகை வனிதா  பீட்டர்பால் என்ற அனிமேஷன் இயக்குனரை  கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. அவரது மனைவி எலிசபெத் ஹெலன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கூட செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டார்.

 

இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக பார்க்கப்பட்டதை அடித்து வனிதாவுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தனர். அது அத்தனைக்கும் பதிலடி கொடுத்து தனது புதுமண வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் வனிதாவுக்கு தினம் தினம் ஒரு பிரச்சனை வருகிறது.

இந்நிலையில் தற்போது லைவ் பேட்டியில் தன்னை தரக்குறைவாக பேசிய வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதனை ட்விட்டரில் வெளியிட்டுள்ள வனிதா," ஒரு குடும்பத்திற்கு உதவி செய்வது போன்றும், தேவையில்லாமல் என் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டு,

அதைச் செய்ய அவருக்கு அதிகாரம் இல்லாதபோதும் ஒரு போலி நீதிபதியாக செயல்படுவதற்கு என்னிடம் ரூ .1 கோடி 25 லட்சம் கேட்டு  நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் தன் வழக்கறிஞர் மூலம் என்னை மிரட்டுவதை பாருங்கள்.. அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார். இது தொடர்பாக என் வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார் என்று வனிதா பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News