×

என்னமா இப்புடி பண்றீங்களேமா... வனிதா திருமணம் குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்வீட்!

நடிகை வனிதா - பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ம் தேதி மூன்றாம் திருமணம் செய்துகொண்டு புது வாழ்க்கை துவங்கியுள்ளார். இந்நிலையில் பீட்டர் பால் மனைவி  எலிசபெத் ஹெலன் என்னிடமிருந்து முறையாக விவாகரத்து கூட பெறாமால் பீட்டர்  வனிதாவை திருணம் செய்துகொண்டுள்ளார் என புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து பேசியுள்ள வனிதா “பீட்டர் பால் கடந்த 8 வருடமாக தனியாகத் தான் வாழ்ந்து வந்தார். நல்ல மனிதர். திருமணம் முடிந்து நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். வனிதா விஜயகுமார் என்ற பெயரைக் கேட்டாலே சிலர் அதை வைத்து விளம்பரம் தேட நினைக்கிறார்கள்.

பீட்டரின் முதல் மனைவியும் ஒரு பெண் தான். இந்த நேரத்தில் அவரைப் பற்றி நான் குறை கூற விரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் யாரோ தூண்டிவிட்டு ரூ.1கோடி பணம் பறிப்பதற்காக இப்படி ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதை நங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்” என கூலாக கூறினார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து சொல்வதெல்லாம் உண்மை புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் இப்பொழுது தான் இந்த செய்தியை பார்த்தேன். அந்த நபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

இன்னும் விவாகரத்து ஆகவில்லை. படிப்பும், புகழ் வெளிச்சம் உள்ளவர் எப்படி இதுபோன்ற ஒரு தவறை செய்ய முடியும் ? அதிர்ச்சியடைந்தேன். வனிதா மற்றும் பீட்டர் பாலின் திருமணம் முடியும் வரை அவர் ஏன் காத்திருந்தார். ஏன் திருமணத்தை நிறுத்தவில்லை ? என்று கேள்வி எழுப்பி இரண்டு தரப்பிலும் உள்ள குற்றத்தை கேள்வி கேட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News