நதியா வாய்ப்பை தட்டி பறித்த லட்சுமி ராமகிருஷ்ணன்... இந்த முன்னணி இயக்குனர் படமாம்...

யுத்தம் செய் திரைப்படம் 2011ம் ஆண்டு வெளிவந்தது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மிஸ்கின் எழுதி இயக்கி இருந்தார். இயக்குனர் சேரன் ,தீபா ஷா, ஒய்.ஜி மகேந்திரா, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜெயபிரகாஷ், மற்றும் செல்வா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியாகி 10 வருடம் நிறைவடைந்து இருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் மொட்டை அடித்து இருந்தார். இதற்காகவே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் அவரின் கதாபாத்திரத்தை நதியாவிடமே சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவரால் அப்போது இப்படத்தை செய்ய முடியாமல் போனது. உடனே மிஷ்கின் லட்சுமி தான் செய்யவேண்டும் என முடிவு எடுத்திருக்கிறார். ஆனால், அவரின் உதவிக்குழு மொத்தமும் நதியாவே இப்பாத்திரத்திற்கு சரியானவர் எனக் கூறி இருக்கின்றனர்.
ஆனால், மிஷ்கின் மட்டுமே லட்சுமி ராமகிருஷ்ணனை முடிவு செய்திருக்கிறார். தொடர்ந்து, படத்தில் நடிக்க முடியை தயங்காமல் மொட்டை அடித்திருக்கிறார். குடும்பத்தினர் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். ஆனால், அவரின் கேரக்டர் சீக்ரெட்டாக இருக்க வேண்டும் என்பதால் அப்போது வெளியில் சென்றால் விக்குடன் தான் செல்வாராம். நல்ல கதை கொண்ட கேரக்டருக்காக முடியை இழக்குறதுல தப்பில்லைன்னு இதை செய்ததாக லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சகாக்களிடம் தைரியமாக தெரிவித்து இருந்தாராம்.