Categories: Cinema News latest news

அப்பாவோட மாஸ மொத்தமா சரித்து விட்ட ஐஸ்வர்யா!.. 2ம் நாளில் காலியான லால் சலாம்!..

ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படத்தின் முதல் நாள் வசூலே மோசமான நிலையில் இருந்த நிலையில், 2வது நாள் வசூல் பதாளத்திற்கே சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்த சூப்பர் ஸ்டாரை லால் சலாம் மூலமாக மீண்டும் டோட்டல் டேமேஜே செய்து விட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

நேஷனல் அவார்டு படம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன நிலையில், விருது படம் போர் அடிக்குமேப்பா என ரஜினி ரசிகர்களே தியேட்டர் பக்கம் போகாமல் லால் சலாம் படத்தை லாஸ் எல்லாம் என ஆக்கி விட்டனர்.

இதையும் படிங்க: அஜித் போட்ட கண்டிசன்.. ‘விடாமுயற்சி’ படக்குழு செய்த தவறே இதுதான்! ரிலீஸில் ஏற்படும் சிக்கல்

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் மகள் என நம்பி சுபாஷ்கரன் போட்ட பணத்தில் ஒரு பங்கு கூட வராது போல தெரிகிறது. எந்தவொரு ஓடிடி நிறுவனமும் இதுவரை அந்த படத்தை வாங்க முன் வரவில்லை.

முதல் நாளில் 4.3 கோடி வசூல் ஈட்டிய லால் சலாம் இரண்டாம் நாளில் வெறும் 3 கோடி ரூபாய் என குறைந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமையான இன்றும் டிக்கெட் புக்கிங் பெரிதாக இல்லை என்றே கூறுகின்றனர்.

இதையும் படிங்க: குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ!. கடுப்பாகி பானுமதி செய்த தரமான சம்பவம்!…

லால் சலாம் படத்தின் லாஸ் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் பாதிப்பை ஏற்படுத்துமா என லைகா இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டதாக கூறுகின்றனர். கோச்சடையான் மூலமாக செளந்தர்யா ரஜினிகாந்த் சம்பவம் செய்ததை போல நானும் ஒரு சம்பவம் செய்றேன் என அடம்பிடித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பாவை இப்படி வச்சு செஞ்சிட்டாரே என ட்ரோல்கள் பறக்கின்றன.

Saranya M
Published by
Saranya M