Connect with us

Cinema News

இன்னும் 7 ஆகலையா?.. லேட்டான லால் சலாம் டிரெய்லர்!.. கும்பகர்ணன் எந்திரி என கலாய்க்கும் ரசிகர்கள்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம் தான் போஸ்ட்போன் ஆகுதுன்னா ஒரு டிரெய்லர் கூடவா இப்படி லேட் ஆகும் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கடைசி வரை ரஜினிகாந்த் படம் என்றே விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்த லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற பிரஸ் மீட்டில் கூட புரமோஷன் செய்திருக்கிறார். அந்த தியேட்டரிலேயே வெளியிட நினைத்த டிரெய்லர் டெக்னிக்கல் பிரச்சனை காரணமாக வெளியாகவில்லையாம்.

 

சத்யம் தியேட்டராக இருந்தால் ஆடியோ நன்றாக இருந்திருக்கும் என அதற்கு ஒரு சாக்கும் சொல்லி ரசிகர்கள் மத்தியில் சிரிப்பை கிளப்பி வருகிறார்.

வரும் பிப்ரவரி 9ம் தேதியே படத்தோட டிரெய்லரை வெளியிடுங்க, அதுக்குள்ள படமே ரிலீஸ் ஆகிடும் என்றும் விடாமுயற்சி அப்டேட் தான் கொடுக்க மாட்ற, லால் சலாம் டிரெய்லரையாவை 7 மணிக்கு சொன்ன நேரத்திலே வெளியிடாமல் தூங்குறியா கும்ப கர்ணா என லைகாவையும் ரசிகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.

லால் சலாம் டிரெய்லர் வந்தாலும், பெரிதாக ஒரு இம்பேக்ட்டும் இருக்காது என்றும் ஏற்கனவே வெளியான டீசர் மற்றும் பாடல்கள் எதுவுமே ஹிட் அடிக்கவில்லை. இந்த வாரம் மணிகண்டனின் லவ்வர் படம் தான் ஓடப் போகுது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top