×

லலிதா ஜூவல்லரி உரிமையாளரை ஏமாற்றி நில மோசடி – அதிரவைக்கும் புகார் !

லலிதா ஜூவல்லரி திருவண்ணாமலையில் புதிதாக நிலம் வாங்க முயன்ற போது ஏமாற்றப்பட்டுள்ளதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

லலிதா ஜூவல்லரி திருவண்ணாமலையில் புதிதாக நிலம் வாங்க முயன்ற போது ஏமாற்றப்பட்டுள்ளதாக போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லலிதா ஜூவல்லரி தமிழகத்தின் பிரபலமான நகைக்கடைகளில் ஒன்று. தமிழகம் முழுவதும் பல இடங்களில் அதற்கு கிளைகள் உள்ளன. இந்நிலையில் திருவண்ணாமலையில் கிளைத் தொடங்குவதற்காக அவர்கள் 2012 ஆம் ஆண்டு நிலம் வாங்க முயன்றபோது பன்னீர் செல்வம், ராதா மற்றும் மாதவி ஆகிய மூன்று பேர் போலியான வில்லங்க எண் காட்டி 1.75 கோடி ரூபாய்க்கு நிலத்தை விற்றதாகவும் மேலும் 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து திருவண்ணாமலை கிளையின் மேலாளர் மூலமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மோசடி செய்ததாக சொல்லப்படும் பன்னீர்செல்வம் திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News