×

அதுல்யா - லாஸ்லியா இணைந்து நடித்த விளம்பர பாடல்.. சமூக வலைதளத்தில் வைரல்!

குடும்ப குத்து விளக்காக இருந்த அதுல்யா சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் கிளாமரை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஏமாளி, கேப்மாரி படங்களில் உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
 
Adhulya ravi

குடும்ப குத்து விளக்காக இருந்த அதுல்யா சமீபகாலமாக தான் நடிக்கும் படங்களில் கிளாமரை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஏமாளி, கேப்மாரி படங்களில் உச்சகட்ட கவர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

சமீபகாலமாக அதுல்யா ரவி நடித்த இந்தப்படமும் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. இருந்தாலும் அதுல்யா எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று நடித்து வருகிறார். மிகவும் எதிர்பார்ப்பில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'நாடோடிகள் 2' படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Adhulya ravi - cinereporters
Adhulya ravi - cinereporters

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு ரசிகர்களிடையே பிரபல நட்சத்திரம் லாஸ்லியா. மேலும் தற்போது இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜனுடன் இணைந்து ப்ரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தற்போது லாஸ்லியா மற்றும் அதுல்யாவுடன் இணைந்து விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் இளம் நடிகைகள் இருவரும் நடனமாடியுள்ள அந்த விளம்பரம் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

bigg boss lasliya
lasliya- cinereporters

அந்த வீடியோவை லாஸ்லியா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விளம்பரப்பாடலை இயக்குனர் அருண்குமார் காமராஜா எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

ப்ரெண்ட்ஷிப் படத்தையடுத்து லாஸ்லியா கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்துவருகிறார். அதேபோல் அதுல்யா தற்போது ஜெய்யுடன் எண்ணித்துணிக எனும் படத்தில் நடித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News