">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
உடைந்த கால்களுடன் 240 கி.மீ.. சொந்த ஊருக்கு நடந்தே போகும் வாலிபர்… அதிர்ச்சி வீடியோ
கொரோனா வைரஸ் தொடர்பாக நாடு முழுவதும் மக்கள் கடுமையான பாதிப்பு உள்ளாகியுள்ளனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதில், சொந்த மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று பணிபுரிந்து வரும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம், வேலையின்றி, உணவின்றி, சொந்த ஊருக்கு செல்ல போக்குவரத்து எதுவுமின்றி அவர்கள் கால்நடையாக செல்லும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி கலங்க வைத்தது.
இந்நிலையில், ராஜஸ்தானை சேர்ந்த பன்வர்லால் என்கிற வாலிபர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரின் காலில் அடிபட்டு முறிவு ஏற்பட்டது. எனவே, அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது.
திடீரென பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டதால் வேலையை இழந்த அவர் தனது சொந்த ஊருக்கு நடந்தே செல்ல துவங்கிவிட்டார். ஒரு ஆங்கில் ஊடகத்திடம் பேசிய அவர் ‘ஒரு வாகனம் மூலம் 500 கி.மீ பயணம் செய்தேன். அங்கிருந்து என் ஊருக்கு 240 கி.மீட்டர். கால்நடையாக செல்ல துவங்கி விட்டேன். என்னை போலீசார் தடுத்து நிறுத்துவார்கள் எனத் தெரியும். ஆனால், எனக்கு வேறு வழியில்லை. என் குடும்பம் அங்கே இருக்கிறது. வரும் வழியில் என் காலில் இருந்த கட்டுகளை அவிழ்த்து விட்டேன்’ எனக்கூறினார்.
Desperate migrant, cuts off his Plaster, starts walking towards Rajasthan to reach home @ashokgehlot51 @INCIndia @SachinPilot @ChouhanShivraj @RahulGandhi@soniandtv @ndtv @NPDay@delayedjab #lockdownindia#MigrantsOnTheRoad #covid #Coronavirustruth pic.twitter.com/AY2cpEcj08
— Anurag Dwary (@Anurag_Dwary) March 31, 2020