">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
4 பேரைத் தூக்கில் போட்டால் ஒரு லட்சம் – நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கில் போடப்போவது இவர்தான் !
நிர்பயா குற்றவாளிகளை வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அதற்காக ஹேங்க்மேன் மீரட் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளை வரும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கில் போட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அதற்காக ஹேங்க்மேன் மீரட் சிறையிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளார்.
2012இல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிர்பயா வழக்கில் ராம்சிங், மகேஷ்சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய குமார் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் மற்றவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவரான ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் மற்ற நால்வருக்குமான தூக்குதண்டனை வரும் 22 ஆம் தேதி நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறையில் ஹேங்மேன் இல்லாததால் மீரட்டில் இருந்து பவான் ஜல்லார்ட் என்ற ஹேங்மேன் வரவழைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 4 பேரையும் தூக்கிலிட்டால் அவருக்கு நபருக்கு 25,000 ரூபாய் வீதம் ஒரு லட்சம் வழங்கப்படும். இதைவைத்து தனது மகளின் திருமணத்தை முடிக்க இருப்பதாக அவர் சொல்லியுள்ளார்.