">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஊரடங்கை மீறி வெளியே வந்தவரை தண்டித்த போலீஸ் நண்பர் – மன்னிப்புக் கேட்ட வீடியோ!
சென்னையில் ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வந்த நபரைத் தாக்கிய போலிஸ் காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலிஸாரின் வேலைகள் சிக்கலாகியுள்ளன. இந்நிலையில் ஊரடங்கை மீறி வீட்டை விட்டு வெளியே வருபவர்களை ஆங்காங்கே போலிஸார் தாக்கும் சம்பவங்களும் வீடியோக்களாக சமூகவலைதளங்களில் வெளியாகி வருகின்றன.
சென்னையில் அதுபோல சம்பவம் நடந்து வீடியோ வெளியாகி வைரலானது. சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் வேலை முடித்து வர காவலர் சத்யா அவரை லத்தியால் அடித்தார். இது சம்மந்தமாக இருவரும் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி வைரலானது. இந்நிலையில் காவலர் சத்யா மூர்த்தியிடம் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் மூர்த்தி ‘காவலர் சத்யா எனது நண்பர்தான். நான் ஊரடங்கு உத்தரவை மீறியதால் அவர் என்னை அடித்தார். இது காவலர்களின் கடமை. எனவே இதனை பெரிதுபடுத்தாமல் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இணைந்து செயல்படுவோம்’ எனக் கூறியுள்ளார்.