நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் அடுத்ததாக பாலிவுட்டில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஜவான் படத்தின் மூலமாக ஹிந்தி ரசிகர்களுக்கு பரிச்சயமான விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி மூலமாக வட இந்தியர்கள் அதிகமாக பார்த்துள்ளனர்.
உலக அளவில் சுமார் 10 நாடுகளில் அந்த படம் ஓடிடியில் முதல் இடத்தை பிடித்தது. இந்நிலையில், இப்படி ஒரு தரமான படத்தை ரீமேக் செய்து மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க நடிகர் அமீர்கான் முடிவு செய்துள்ளதாக சூடான அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி நடராஜ், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்த மகாராஜா திரைப்படம் தமிழில் 100 கோடி வசூலை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்து உலக அளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
தொடர் தோல்விக்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கும் அமீர்கான் தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துவிட்டார் என்றும் இந்தப் படத்தின் ரீமேக்கில் தான் நடிக்கப் போகிறார் என்றும் பாலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
அமீர்கான் நடித்தால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி படமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இந்தி ரசிகர்கள் இந்த படத்தை பார்த்துவிட்ட நிலையில், அது பாதகமாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை அமீர்கான் நடிப்பது சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…