1. Home
  2. Latest News

கமல் சிபாரிஸில் பிக்பாஸ் 4ல் நுழையும் பிரபல நடிகரின் மகன் - அப்போ இவர் தான் டைட்டில் வின்னரா?

கமல் சிபாரிஸில் பிக்பாஸ் 4ல் நுழையும் பிரபல நடிகரின் மகன் - அப்போ இவர் தான் டைட்டில் வின்னரா?

பிக்பாஸிற்கு பிரபல நடிகரின் மகனை சிபாரிசு செய்த கமலஹாசன்

கமல் சிபாரிஸில் பிக்பாஸ் 4ல் நுழையும் பிரபல நடிகரின் மகன் - அப்போ இவர் தான் டைட்டில் வின்னரா?

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது.  பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது.

கமல் சிபாரிஸில் பிக்பாஸ் 4ல் நுழையும் பிரபல நடிகரின் மகன் - அப்போ இவர் தான் டைட்டில் வின்னரா?

அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான நாசர் மகன் அபிஹாசன் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் கமலஹாசன் மகள் அகஷரா ஹாசனுக்கு ஜோடியாக கடாரம் கொண்டான் படத்தில் நடித்திருந்தார். இவர் கமல் ஹாசனின் சிபாரிசின் பேரில் தான் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் கூறுகிறது. அனேகமாக இவர் தான் பிக்பாஸ் 4 சீசன் டைட்டில் வின்னராக இருக்கக்கூடும் என கிசு கிசுக்கப்படுகிறது.