பிக்பாஸ் 4 சீசனில் அதிரடி மாற்றம் - ரசிகர்கள் அதிர்ச்சி


விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க வரவேற்பை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்போது 4வது சீசன் துவங்க உள்ளது.
இந்நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் சீசன் 4 வருகிற அக்டோபர் - 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறதாம். அதில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தப்படுவார்கள்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த முறை நிகழ்ச்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த முறை மொத்தம் 16 பேர் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த முறை 12 பேர் மட்டுமே அனுப்பப்படவுள்ளனராம். அதேபோல், பிக்பாஸ் வீட்டிற்கு செல்பவர்கள் 100 நாட்கள் அங்கு தாக்குபிடிக்க வேண்டும். ஆனால், இந்த முறை அது 80 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.