Actor Abbas: கதிர் இயக்கிய காதலர் தினம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அப்பாஸ். மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த நடிகர்களில் இவரும் ஒருவர். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். ‘அட அழகாக இருக்கிறாரே’ என இவருக்கு பெண் ரசிகைகளும் உண்டானார்கள்.
சாக்லேட் பாய் லுக்கில் பல படங்களில் ரொமான்ஸ் செய்தார் அப்பாஸ். குறுகிய காலகட்டத்தில் மிகவும் வேகமாக வளர்ந்தார். சிம்ரனுடன் தொடர்ந்து சில படங்களில் நடித்ததில் அவருடன் காதல் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அது பிரேக்கப்பில் முடிந்தது.
அப்பாஸின் கால்ஷீட்டை கவனித்து வந்த நபர் அவருக்கு சரியான கதைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவில்லை. எனவே, மொக்கையான கதைகளில் நடித்து தோல்விப்படங்களை கொடுத்து மார்க்கெட்டை இழந்தார். காதலுக்கு மரியாதை பட வாய்ப்பு கூட முதலில் பிரபாஸுக்குதான் வந்தது. ஆனால், அதை தவறவிட்டார்.
அதன்பின் மார்க்கெட் இழந்து சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் சினிமாவே வேண்டாம் என முடிவுசெய்து நியூஸ்லாந்தில் குடும்பத்துடன் செட்டில் ஆனார். வொர்க் பர்மிட்டில் விசா எடுத்ததால் கார் டிரைவராக கூட சில மாதங்கள் வேலை செய்தார்.
அதன்பின் நியூஸ்லாந்துக்கு சினிமா படப்பிடிப்புக்கு வருபவருக்கு வழிகாட்டியாக இருந்தார். ஷூட்டிங்கிற்க்கு தேவையான இடங்களை காட்டுவது, தங்கும் ஏற்பாடுகளை செய்து தருவது போன்ற வேலைகளை செய்து வந்தார். இது போக பெங்களூர், சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் சில தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார். பல வருடங்களுக்கு பின் இப்போது மீண்டும் நடிக்க வருகிறார் அப்பாஸ்.
புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு வெப் சீரியஸில் அப்பாஸ் நடிக்கவிருக்கிறார். இதை களவாணி, வாகை சூடவா போன்ற படங்களை இயக்கிய சற்குணம் இயக்கவுள்ளார். இதில், துஷரா விஜயன், அதிதி பாலன் போன்றவர்களும் நடிக்கவுள்ளனர். இந்த வெப் சீரியஸுக்கு ‘எக்ஸாம்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். தலைப்பு பார்க்கும்போது இந்த படத்தில் அப்பாஸ் ஒரு கல்லூரி பேராசிரியராக நடித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…