ஷகீலா: 90களில் தமிழ் , மலையாளம் என படு பிஸியாக வலம் வந்த நடிகை ஷகீலா. கவர்ச்சிப் படங்களில் நடித்து இன்று வரை தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். முன்பெல்லாம் ஷகீலாவை பார்த்தாலே படு கேவலமான கமெண்ட்களை தெறிக்க விடும் ரசிகர்கள் இன்று அவரை பார்த்து அம்மா என்று அழைக்க தொடங்கியிருக்கின்றனர். அப்படிப்பட்ட படங்களில் நடித்தாலும் சுய ஒழுக்கம் என ஒன்று இருக்கிறது.
இளவரசு சொன்ன தகவல்: அது ஷகீலாவின் பேச்சிலேயே தெரிகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் ஷகீலாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியது. அதிலிருந்து ஷகிலா இப்போது தைரியமாக வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில் சமுத்திரக்கனியின் திரு. மாணிக்கம் படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. அதற்கு திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஷகீலாவும் அங்கு வந்திருந்தார். அப்போது நடிகர் இளவரசு ஷகீலாவை பற்றி பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். இதோ அவர் கூறியது:
சுய அறம்: சினிமாவில் பல பேர் காலம் தள்ளுவதற்கு முக்கியமான விஷயம் என்னவெனில் சுய அறம். நம்மை நாமலே ஒழுக்கமாக வச்சிக்கிட்டால் அந்த மாதிரி தான் ஒரு சுய அறத்தில் எனக்கு ஒரு கௌரவமான தோழி என் அன்புக்குரிய ஷகிலா. எனக்கு வாழ்க்கையில் பெருமை என்ன தெரியுமா? பெண்களை பத்தி புரிந்து கொள்வதற்கு ஷகிலாவோட எனக்கு இருந்த நட்பு. அது சொல்லுவதில் எனக்கு ரொம்ப பெருமை.
பயந்துட்டேன்: ஏனெனில் ஷகிலா சினிமாவில் கவர்ச்சி நடிகை அப்படி இப்படி என சொல்வார்கள். ஆனால் அது எதற்குமே கோபப்படாமல் பதில் சொல்கிற அவருடைய பக்குவத்தை பார்த்து நான் பயந்து விட்டேன். எனக்கெல்லாம் அந்த அளவு பக்குவம் கிடையாது. ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நான் ஒரு படத்தில் நடிப்பேன். ஷகிலா வேறொரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பார்.
ட்ரெயினில் ஏறி வந்தால் தொடர்ச்சியாக நாங்கள் இரண்டு பேரும் இங்கே இருந்து ஒன்றாக போறது அங்கிருந்து ஒன்றாக வருவது ,வேற வேற படத்தில் நடித்திருந்தாலும் ஏறி பார்த்தால் கரெக்டா ரயிலில் ஷகிலா உட்கார்ந்து இருப்பார். இது கிட்டத்தட்ட பல மாதங்கள் நடந்து கொண்டிருந்தன. நிறைய விஷயங்கள் நாங்கள் பேசி இருக்கிறோம். ஒரு பெண் உண்மையைப் பேச ஆரம்பித்ததற்கு அப்புறம் நான் என் மனைவியை பற்றி என் மகளைப் பற்றி என் தாயைப் பற்றி புரிந்து கொள்வதற்கு ரொம்ப முக்கியமாக இருந்தது ஷகிலாவோட இந்த நட்புதான்.
அப்படியெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். எல்லோருக்கும் இமேஜ் இருக்கிறது. யாராக இருந்தாலும் நம்மை பற்றி தவறாக நினைத்து விடுவார்களோ என்ற ஒரு முன் ஜாக்கிரதை இருக்கும். டேய் நான் இது தான். நீ என்னை எப்படி வேணாலும் எடுத்துக்கோ. நான் இப்படித்தாண்டா என பேசுகிற தைரியம் இருக்கிறது என்றால் அதற்கு ரொம்ப பெரிய தைரியம் இருக்க வேண்டும் .ஆனால் அது தைரியமா விழிப்புணர்வா என எனக்கு பெயர் சொல்ல தெரியவில்லை. அப்படி ஒரு தோழி ஷகிலா என இளவரசு அந்த மேடையில் கூறினார்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…