Connect with us

Cinema News

ஸ்ரீகாந்த் போல ஓட்டவாய் இல்லை!.. போலீஸ் விசாரணையில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணா என்ன சொன்னாரு தெரியுமா?..

நடிகர் கிருஷ்ணா கேரளாவில் படப்பிடிப்புக்காக சென்றதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தனிப்படை போலீசார் அவரை பிடிக்க விரைந்த நிலையில், போலீஸ் விசாரணைக்கு நடிகர் கிருஷ்ணா ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும் அவர் அளித்த வாக்குமூலத்தில் தான் போதைப் பொருளை பயன்படுத்தவே இல்லை என்றும் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் கனகராஜ் படங்களில் தான் போதைப் பொருள் காட்சிகள் உள்ளன என்றும் தமிழ்நாட்டில் அதுபோன்று எல்லாம் கிடையவே கிடையாது என்றும் சிலர் கூறி வந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளிலேயே போதைப் பொருட்கள் அதிகம் சப்ளை செய்யப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டு வந்த நிலையில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை பணம் படைத்த சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாங்கி உட்கொண்டு வருவதாக போதை தடுப்புப் பிரிவு சட்ட போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

அதுதொடர்பாக நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில், அதிமுகவை சேர்ந்த ஐடி விங் நபர் பிரசாத் என்பவர் சிக்கினார் என்றும் அவரைத் தொடர்ந்து பிரதீப் என்பவர் மாட்டிய நிலையில், பிரசாத்திடம் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்டோர் போதைப் பொருட்களை வாங்கிச் சென்றதாக சொல்லி விட்டார்.

நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணை நடத்தி பரிசோதனை செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது அம்பலமானது. மேலும், அவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவை இன்று தனிப்படை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தனக்கு இரைப்பை அலர்ஜி இருப்பதாகவும் போதைப் பொருள் எல்லாம் பயன்படுத்தினால் போய் சேர வேண்டியது தான் என்றும் ஸ்ரீகாந்த் உடன் நட்பு வட்டத்தில் இருந்ததை தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது என வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவருடைய பிளட் டெஸ்ட் ரிப்போர்ட் வெளியானாதும் போலீசார் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top