1. Home
  2. Latest News

ராமராஜனுக்கு அந்தப் பெயர் எப்படி வந்ததுன்னு தெரியுமா? அடடே இதுல இவ்ளோ சுவாரசியம் இருக்கா?


25 காசு சம்பளத்தில் ஆரம்பத்தில் வேலை பார்த்த ராமராஜன் பின்னாளில் வளர்ந்து ஒரு நாளுக்கு இரண்டரை லட்ச ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் தொடங்கி தொடர்ந்து 45 படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டார். அவருக்குப் பெரிய தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்றாலும் சிறு தயாரிப்பாளர்களின் அபிமான நடிகராக இருந்தார். அவரோட படங்கள் பெரும்பாலும் சூப்பர்ஹிட் ஆகிவிடுவதால் யாரும் பெரிய அளவில் நஷ்டப்படவில்லை.

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் நடிகரும், இயக்குனருமான ராமராஜனைப் பேட்டி கண்டார். அப்போது சில சுவாரசியமான தகவல்களை ராமராஜன் சொன்னார். என்னன்னு பார்க்கலாமா...

ராமராஜனுக்கு ரெண்டாவது படமே இயக்குனர் பாரதிராஜாவின் படத்தை டைரக்ட் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதைப் பற்றி சொல்லுங்க என சித்ரா லட்சுமணன் கேட்கவும் ராமராஜன் இப்படி பதில் சொன்னார். ராமராஜான்னு பேரு வாங்கறதுக்குக் காரணமே இதுதான். குமரேசன்கற பேரு வேண்டாம். அது எடுப்பா இல்ல. அப்போ 16 வயதினிலே படம் பார்க்கும்போது பாரதிராஜா,

இளையராஜான்னு ராஜா ராஜான்னு பார்த்துக்கிட்டு வந்தேன். அப்போ அந்த ராம்கற பேரு எனக்கு ரொம்ப சென்டிமென்டா அமைஞ்சது. அப்பா பேரு ராமையா, ராமநாதபுரம் மாவட்டத்துல தான் பிறந்தேன். எல்டாம்ஸ் ரோடுல அந்த ஓனர் பேரு ராமசாமி, எங்க தியேட்டர்ல கொண்டு போய் விட்டவர் ராமசாமி மச்சான் அப்படி ராம் மேல ஒரு ஈடுபாடு இருந்தது.அப்புறம் ராமராஜான்னு பேரு வர, நாலு எழுத்தா இருக்குதேன்னு பார்த்தேன். அப்புறம் அஞ்சாவது எழுத்தா 'ன்' ன சேர்த்து ராமராஜன்னு வச்சிக்கிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா மோகத்தால் சென்னை வந்த ராமராஜன் ராமநாராயணனிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். மண்ணுக்கேத்த பொண்ணு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் ஹீரோவாக நடித்த போது அவரது புகழ் பட்டி தொட்டி எங்கும் பரவியது.

இது அவருக்கு எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, எங்க ஊரு காவல்காரன், பாட்டுக்கு நான் அடிமை என அடுத்தடுத்த படவாய்ப்புகளைக் கொண்டு வந்து சேர்த்தது. எல்லாமே சூப்பர்ஹிட் தான். கரகாட்டக்காரன் படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் ஒரு மைல் கல்லானது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.