Connect with us

Cinema News

இந்த வருடம் சிம்புவுக்கான கடும் நெருக்கடி.. ஆரம்பமே இப்படியா?

தமிழ் சினிமாவில் அஜித்தை போலவே அதிக ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. ஆரம்பத்தில் இவருடைய படங்கள் இளசுகளுக்கு நன்கு தீனி போட்டவையாக அமைந்தது. அந்தளவுக்கு இளைஞர்களுக்கான படங்களில் பெரும்பாலும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். தற்போது சினிமாவின் போக்கே மாறியிருக்கிறது. ஆக்‌ஷன் படங்களையும் கருத்துள்ள படங்களையும் ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதற்கேற்ப சிம்புவும் மாறி வருகிறார் என்றுதான் சொல்லவேண்டும். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தில் நடித்து பெரிய வெற்றியை கொடுத்தார். அதன் பிறகு வரிசையாக பத்து தல மற்றும் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்து நடிப்பில் மன்னன் என்பதை உணர்த்தினார். அதனை அடுத்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக சிம்புவின் எந்த படங்களும் வெளியாக வில்லை. அதனால் அடுத்த வருடமாவது அவரை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு வலைப்பேச்சு அந்தணன் பதில் கூறியிருக்கிறார்.

2024 வது வருடம் நடிகர் சிம்புவின் எந்த படங்களும் வெளியாகவில்லை. 2025 லாவது அவருடைய படங்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறதா என்றுதான் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு பதில் அளித்த வலை பேச்சு அந்தணன் தக் லைப் படம் கண்டிப்பாக 2025 இல் வருகிறது. அது முழுக்க முழுக்க சிம்புவின் படமாக தான் இருக்க போகிறது .

அதன் பிறகு சிம்பு தான் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட வேண்டும். நியாயமாக தன்னுடைய நிலைமையை அவர் உணர்ந்து நாம தான் பின்தங்கி இருக்கிறோம் .நமக்கு பின்னாடி வந்தவர்கள் எல்லாம் முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் முதலில் உணர வேண்டும். அதைவிட சினிமாவிற்காக சில விஷயங்களை அவர் விட்டுக் கொடுக்க வேண்டும்.

சினிமாவில் நான் ஒரு சட்டம் வைத்திருக்கிறேன் .இந்த சட்டத்தை நான் மீற மாட்டேன் .அவங்களும் மீறக் கூடாது என்ற விஷயமே கிடையாது. ரொம்ப கடுமையான நபராக கூட இருக்கலாம். ஆனால் அந்த குறிப்பிட்ட எல்லைக்கு வந்தீர்கள் என்றால் சரணாகதி அடைய வேண்டும். அப்படித்தான் இன்றைய சூழலில் அநேக நடிகர்கள் நடந்து வருகின்றனர். இந்த மாதிரி தன்னை அவர் முதலில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் எவ்வளவு திறமைகளை வைத்து அதை பயன்படுத்த முடியாதபடி நிலைமை மாறிவிடும் . மற்ற நடிகர்களை விட சிம்புவிற்கு ஏகப்பட்ட திறமைகள் இருக்கின்றன. இதை இப்போதே அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதையும் அவர் தவறவிட்டால் கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக கூட அவரால் போக முடியாது என வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top