கன்னட நடிகர் சிவராஜ்குமார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மேற்கொள்வதற்கு அவர் அமெரிக்கா சென்றிருப்பதாகவும் தகவல் சமீபகாலமாக ஓடிக் கொண்டிருந்தது. மேலும் அமெரிக்காவில் கிட்டத்தட்ட ஆறு மாதம் காலம் அங்கு தங்கியிருந்து சிகிச்சையை மேற்கொள்ளப்போவதாகவும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் சிவராஜ்குமாரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட உலகில் சூப்பர் ஸ்டாராக ஜொலிப்பவர் சிவராஜ்குமார். இவருடைய அப்பாவும் நடிகருமான ராஜ்குமார் சினிமா உலகில் மிகவும் போற்றத்தக்க வகையில் வாழ்ந்தவர். ராஜ்குமார் என்று சொன்னாலே கர்நாடகாவில் ஒரு தெய்வத்திற்கு சமமாக போற்றி வருகின்றனர். மிகவும் செல்வந்தராக வாழ்ந்தவர் ராஜ்குமார். அவருடைய இரண்டு மகன்களான சிவராஜ்குமார் மற்றும் புனித் ராஜ்குமார் இருவருமே சினிமாவில் நடிக்க வந்து விட்டனர்.
புனித் ராஜ்குமாருக்கு கர்நாடகாவில் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இன்று வரை இருக்கின்றது. அவர் மறைவிற்கு ஒட்டுமொத்த கர்நாடகாவுமே கண்ணீர் மழையில் மூழ்கியது. இன்னொரு பக்கம் சிவராஜ்குமாரும் கொடி கட்டி பறந்தார். தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் குடி போனார். குறிப்பாக ஜெயிலர் படத்தில் மிரட்டியிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
அடுத்ததாக தனுஷுடனும் சிவராஜ்குமார் நடித்திருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு கேன்சர் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் அவர் கமிட் ஆன படங்களுக்கு கொஞ்சம் பிரேக் கொடுத்து அமெரிக்கா சென்றிருப்பதாகவும் தகவல் வெளியானது. இதில் ஜெயிலர் 2 திரைப்படமும் அடங்கும். ஒரு வேளை ஜெயிலர் 2 படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகமும் இருந்தது.
ஆனால் திடீரென சிவராஜ்குமார் திருப்பதியில் இருக்கும் புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. திருப்பதியில் சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி இருவருமே மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்திருக்கின்றனர். அந்தப் புகைப்படம்தான் வைரலாகி வருகின்றது.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…