Connect with us

latest news

தளபதி 69ல் புதிய வரவாக களமிறங்கும் முன்னணி நடிகை.. கமலின் ஆஸ்தான நடிகையாச்சே

விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் தளபதி 69. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜூ நடிக்கிறார்கள். கூடவே பாபி தியோலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது விஜய்க்கு கடைசி படம் என்பதால் இந்தப் படத்திற்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் எச்.வினோத்.

முதலில் இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனரை வைத்து எடுப்பதாகத்தான் இருந்தது. ஆனால் அவர் சொன்ன கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததால்தான் எச்.வினோத் இந்தப் படத்தை இயக்க முன்வந்தார். விஜயும் ஒரு பக்கம் அரசியலில் அதிக ஆர்வம் செலுத்தி வருவதால் இந்தப் படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஏராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்திற்கு பிறகு விஜய் முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கிறார். சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ள இருக்கிறார். அரசியலில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறார். அவரை சுற்றி எக்கச்சக்கமான விமர்சனங்கள் வந்தாலும் அது எதற்குமே செவி சாய்க்காமல் தன் வேலையில் சரியாக் இருக்கிறார் விஜய்.

இந்த நிலையில் பொங்கலுக்கு அடுத்தபடியாக தளபதி 69 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இன்னும் படக்குழு படப்பிடிப்பிற்கு செல்லவில்லை. இதற்கிடையில் இந்தப் படத்தில் நடிகை அபிராமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். சமீபகாலமாக அபிராமியை பல படங்களில் பார்க்க முடிகிறது.

கடைசியாக வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். மகாராஜா படத்திலும் ஒரு சிறப்பான கேரக்டரில் நடித்திருந்தார் அபிராமி. ஒரு காலத்தில் கமல், சரத்குமார், அர்ஜூன் போன்றவர்களுக்கு ஜோடியாக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தார். கமலின் பல படங்களுக்கு ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுப்பவரும் அபிராமியாகத்தான் இருந்தார்.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in latest news

To Top