1. Home
  2. Latest News

காசுக்காக இவ்ளோவ் Cheap'ஆன வேலையா? ஐஸ்வர்யா ராஜேஷின் ரகசியம் கசிந்தது!

காசுக்காக இவ்ளோவ் Cheap'ஆன வேலையா? ஐஸ்வர்யா ராஜேஷின் ரகசியம் கசிந்தது!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கு துரோகம் செய்த அசிஸ்டன்ட்


காசுக்காக இவ்ளோவ் Cheap'ஆன வேலையா? ஐஸ்வர்யா ராஜேஷின் ரகசியம் கசிந்தது!

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், தன்னுடைய அசிஸ்டன்ட் ஒருவர் தன்னை ஏமாற்றி துரோகம் செய்தது குறித்து பகிர்ந்துகொண்டார். அதவாது, காசுக்காக தனக்கு தெரியாமலே தன்னுடைய ரகசியம், மற்றும் புது படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டு வந்துள்ளார். அதுமட்டின்றி தன்னுடைய வீட்டின் லாக்கர் நம்பரை கூட அந்த நபர் கொடுத்துள்ளாராம். இதையெல்லாம் பார்த்தால் யாரை நம்புவதென்றே தெரியவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.